சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசுப்பணிக்கு போலி நியமன ஆணை: இன்ஜினியர் சிக்கினார்; 'கறந்தவர்' இறந்தார்; ஓசையின்றி முடிவுக்கு வந்த 'வில்லங்கம்'

Added : மே 20, 2020
Share
Advertisement

ஈரோடு: போலி நியமன ஆணை கொடுத்து, பணியில் சேர முயன்ற இன்ஜினியர் கைதான விவகாரத்தில், துப்பு துலக்கி குற்றவாளிகளை பிடிக்க நினைத்த போலீசாருக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஏனெனில், போலி ஆணை தந்த ஆசாமி, 'டிக்கெட்' பெற்றதால், ஓசையின்றி விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஐ.டி.ஐ., அரசு குடியிருப்பை சேர்ந்த, பீட்டர் மகன் பிரவீன்குமார், 26; இவர், ஈரோடு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில், போலி நியமன ஆணை கொடுத்து பணியில் சேர முயன்றதால், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பி.இ., பட்டதாரியான பிரவீன் குமாரின், அத்தை வீடு கோவை, கணபதியில் உள்ளது. அவர் வீட்டின் அருகே வசித்தவர் சரவணன், 60; ஈரோடு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில், வேலை வாங்கி தருவதாக, பிரவீன்குமாரிடம் ஒரு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். மார்ச் மாத இரண்டாவது வாரத்தில், போலி நியமன உத்தரவை வழங்கியுள்ளார். அதில் மார்ச், 30க்குள் ஈரோட்டில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவால் வர முடியாமல், தளர்வு செய்யப்பட்ட நிலையில், ஈரோடு மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு, நேற்று முன்தினம் அவர் வந்தபோது, கைதானதும் தெரிந்தது. இதனிடையே பிரவீன்குமார் தந்த சரவணனின் மொபைல்போன் எண்ணை, போலீசார் தொடர்பு கொண்டனர். அவர் கடந்த, ?ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தது தெரிந்தது. எனவே, போலி நியமன ஆணை விவகாரத்தில், மேற்கொண்டு விசாரிக்க வழியின்றி, ஈரோடு தாலுகா போலீசார் முற்றுப்புள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X