சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கி முதுநிலை பட்டதாரி பலி: தாய், தம்பி கண்ணெதிரே அதிர்ச்சி சம்பவம்

Added : மே 20, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, பாறைக்குழி தண்ணீரில், தாய்க்கு உதவியாக சிமென்ட் சாக்குப்பைகளை அலசிய முதுநிலை பட்டதாரி வாலிபர், தண்ணீரில் மூழ்கி பலியானது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மொடக்குறிச்சி அருகே, சின்னியம்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் முனுசாமி. சிமென்ட் சாக்குகளை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவரின் மனைவி பாவாத்தாள், 47; தம்பதியரின் மகன்கள் நவநீத கிருஷ்ணன், 23, எம்.எஸ்சி., பட்டதாரி. பார்த்தீபன், 16, அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியில் பாலாஜி கார்டனில், 100 அடி ஆழம் கொண்ட பாறைக்குழியில் தண்ணீர் உள்ளது. அதில்தான் வழக்கமாக, சிமென்ட் சாக்குகளை சுத்தம் செய்வார்கள். ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்த நவநீதகிருஷ்ணன், பார்த்தீபன் ஆகியோர், தாய் பாவாத்தாளுடன் சேர்ந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, சிமென்ட் சாக்கு களை சுத்தம் செய்ய, பாறைக்குழிக்கு சென்றனர். எதிர்பாராதவிதமாக பாவாத்தாள், நவநீதகிருஷ்ணன் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்த பார்த்தீபன், தாயின் தலைமுடியை பிடித்து இழுத்து காப்பாற்றினார். ஆனால், அண்ணனை காப்பாற்ற முடியவில்லை. இருவரும் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, நவநீத கிருஷ்ணன் உடலை மீட்டனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X