சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி கொலையில் 7 பேர் கும்பல் கைது

Added : மே 20, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: ரவுடி கொலை வழக்கில், சிறுவன் உள்பட ஏழு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல், நாகல்நகர் கோயிலை சேர்ந்தவர் பிரபு, 38, கட்டட தொழிலாளி. மொடக்குறிச்சி அருகே முத்துக்கவுண்டன் பாளையத்தில், மாமனார் வீட்டருகே குடும்பத்துடன் வசித்தார். இவர் மீது திருட்டு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கஞ்சா கடத்தல், திருட்டு, ரவுடிகளுடன் சேர்ந்து, பல பிரச்னைகளில் சிக்கினார். திடீரென மாயமான பிரபு, அதே பகுதியில் உள்ள கிணற்றில், அழுகிய நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். மொடக்குறிச்சி போலீசார் விசாரணையில், பிரபுவை கொலை செய்தது தெரிந்தது. இது தொடர்பாக, முத்துக்கவுண்டம்பாளையம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் வெற்றிவேல் 27, மணிகண்டன், 27, காளிமுத்து மகன் ஜெகதீஸ் 24, பள்ளிக்கூடவீதி ஏ.பி.டி., தோட்டம் குப்புசாமி மகன் சதீஷ், 18, செல்வராஜ் மகன் அஜித்குமார், 27, லக்காபுரம் விநாயகர் நகர் வெங்கடாஜலம் மகன் சிவா, 23 மற்றும் 16 வயது சிறுவன் என, ஏழு பேரை, நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட ஏழு பேரில், முக்கிய குற்றவாளியான வெற்றி வேலுக்கும், கொலை செய்யப்பட்ட பிரபுவுக்கும், இரண்டு ஆண்டாகவே மோதல் போக்கு இருந்தது. ஆனாலும், சில நாளில் சேர்ந்து விடுவர். கடந்த, 15ம் தேதி வெற்றிவேல் தந்தை அண்ணா துரையை, பிரபு தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றி வேல், நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சம்பவத்தன்று நைசாக அவரை அழைத்து, மது குடிக்க வைத்து தாக்கியுள்ளனர். நிலைகுலைந்த பிரபுவின் கால்களை, துண்டால் கட்டி இழுத்து சென்று, கல்லால் தாக்கி கொலை செய்து, கிணற்றில் சடலத்தை வீசியுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர். இதனிடையே உடற்கூறு பரிசோதனை முடிந்து, பிரபுவின் சடலத்தை, மனைவி சங்கீதாவிடம், போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X