பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறியோரிடமிருந்து ரூ.26.46 லட்சம் அபராதம் வசூல்

Added : மே 20, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியோரிடமிருந்து, 26 லட்சத்து, 46 ஆயிரத்து, 400 ரூபாய் அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்க கடந்த மார்ச், 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவை மீறிய, வாகன ஓட்டிகள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்வதோடு, அபராதமும் வசூலித்து வருகின்றனர். இதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், கடந்த மார்ச், 24 முதல் நேற்று முன்தினம் வரை, ஊரடங்கு உத்தரவை மீறிய, 12 ஆயிரத்து, 954 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, 5,580 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியோரிடமிருந்து, 26 லட்சத்து, 46 ஆயிரத்து, 400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X