பொது செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் உள்ளவர்களை மட்டும் அனுமதிக்க டி.ஐ.ஜி., அறிவுறுத்தல்

Added : மே 20, 2020
Share
Advertisement

தர்மபுரி: இ-பாஸ் உள்ளவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என, சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு, டி.ஐ.ஜி., பிரதீப்குமார் அறிவுரை வழங்கினார்.
கொரோனா பாதிப்பை தடுக்க கடந்த மார்ச், 24 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து, தர்மபுரி மாவட்டத்துக்குள் அனுமதியின்றி நுழைவதை தடுக்க, தர்மபுரி மாவட்டத்தில், 10 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார் நேற்று, தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, கோம்பூர், அனுமந்ததீர்த்தம், நரிப்பள்ளி, திப்பம்பட்டி, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் ஆய்வு ? மேற்கொண்டார்.


* அரூர் சப்-டிவிஷன் பொம்மிடி ராமமூர்த்தி நகரில் உள்ள, சோதனைச்சாவடியில், நேற்று பகல், 12:30 மணிக்கு வந்தார். அப்போது, போலீசாருக்கு கபசுர குடிநீர், ஊட்டச்சத்து உணவு வகைகள், முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கினார். பின்னர், போலீசாரிடம் அவர்களின் குடும்பம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, கவனக்குறைவால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, மிகுந்த எச்சரிக்கையுடன், சமூக இடைவெளியுடன் பணியில் ஈடுபட அறிவுறுத்தினார். மேலும், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்துக்குள் வருவோரை இ-பாஸ் இருந்தால் மட்டும் அனுமதிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி., ராஜன், ஏ.டி.எஸ்.பி., சுஜாதா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X