பொது செய்தி

தமிழ்நாடு

பச்சமுத்து கல்வி நிறுவனங்களில் கொரோனா பணியாளர்களுக்கு சலுகை

Added : மே 20, 2020
Share
Advertisement

தர்மபுரி: பச்சமுத்து கல்வி நிறுவனங்களில் புதிதாக சேரும், மருத்துவத்துறையினர், போலீசார் மற்றும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி கட்டணத்தில், 75 சதவீதம் வரை சலுகை வழங்கப்படும் என, பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தடுப்பு பணியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவத்துறையினர், போலீசார், நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு, பச்சமுத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் சசி ஞானோதயா அகாடமி சி.பி.எஸ்.இ., நன்றி தெரிவிக்கிறது. இவர்க?ளை கவுரவிக்க, நடப்பாண்டில் பச்சமுத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் சசி ஞானோதயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், புதிதாக சேர்க்கும், இத்துறைகளை சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, 50 சதவீத கல்வி கட்டண சலுகை வழங்கப்படும். புதிதாக சேரும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு, 75 சதவீதம் கல்வி கட்டண சலுகை அளிக்கப்படும். இது முதலில் சேரும், 50 பேருக்கு அளிக்கப்படும். மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கே.ஜி., முதல், 5ம் வகுப்பு வரை, 25 மாணவர்கள் மட்டும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 6 முதல், 12 வரை மாணவர்கள், மாணவியருக்கு தனித்தனி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X