பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 240 கன அடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, இம்மாத துவக்கத்தில் இருந்தே, 80 கன அடிக்கு மேல் நீர்வரத்து இல்லை. அதிலும், சில நாட்கள் நீர்வரத்து பூஜ்யம் அளவாக இருந்தது. இந்நிலையில், அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால், நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 122 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான, 44.28 அடியில், 40.67 கன அடிக்கு, நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 240 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து, 240 கன அடியானது. அணையிலிருந்து நேற்றும், 240 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. அணையில், நேற்றைய நிலவரப்படி, 40.67 கன அடிக்கு, நீர் இருப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X