பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்று பாட வீடியோ தயாரிப்பு தீவிரம்

Added : மே 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: மாணவர்களுக்கு வரலாற்று பாடம் குறித்து, அருங்காட்சியகத்துடன் இணைந்து வீடியோ தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு வரலாற்று பாடம் தொடர்பான, காணொளி காட்சி தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டன. ஐந்தாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை வரலாற்று புத்தகங்களில், அருங்காட்சியகத்துடன் தொடர்புள்ள, ஆசிரியைகளின் வினாக்களுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் விளக்கம் அளிப்பது போன்று, இந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருமாத காலம்... இது குறித்து, மகளிர் வலையமைப்பின் செயலர்கள் இசபெல்லாராணி, நிர்மலா ஆகியோர் கூறுகையில், 'பாடம் நடத்தும்போது, மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தீர்க்கும் வகையில், இந்த காணொளி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலில் உள்ளதால், இதை தயாரிக்க இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம்' என்றனர். இந்த வீடியோ, பாடம் தொடர்பாக மட்டுமல்லாது, அருங்காட்சியகம் மற்றும் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், கல்வெட்டுகள், கல்திட்டைகள், கோட்டைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களிடமிருந்து இதுவரை கண்டறியப்படாத வரலாற்று தடையங்களை பெறுவது ஆகியவை உள்ளடங்கி உள்ளதாக, ஆசிரியை ரோஸ்லின் மேரி கூறினார். இந்நிகழ்வை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, விஜயகுமார் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X