பொது செய்தி

தமிழ்நாடு

அவதானப்பட்டி ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

Added : மே 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி ஏரியில், வண்டல் மண் எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குடிமராமத்து திட்டத்தில், தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் அணைகளில் உள்ள வண்டல் மற்றும் களி மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக்கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த ஐந்து நாட்களாக, கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை மற்றும் அவதானப்பட்டி ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வருகின்றனர். ஏரி முழுவதும் நீரின்றி வறண்டுள்ளதால், நான்கு பக்கமும், 20 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு, வண்டல் மண்ணை டிராக்டர் மூலம், விவசாயிகள் அள்ளி எடுத்துச் செல்கின்றனர். ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிக்கு, 25 டிராக்டர் வரை வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், விவசாயிகள் தாசில்தாரிடம் அனுமதி பெற்று, பொதுப் பணித்துறை அலுவலர்களின் மேற்பார்வையில், சுறுசுறுப்பாக வண்டல் மண் எடுத்து வருகின்றனர். இந்த மண் விவசாய நிலத்தில் கொட்டப்படுவதால், பயிர் செழித்து வளர்வதோடு, ஏரியில் அதிகளவில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X