பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார வளாகம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை

Added : மே 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவீரஅள்ளி கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பொது சுகாதார கழிப்பிடம், இதுவரை இல்லாததால் பொதுமக்கள் இயற்கை உபாதைகளுக்கு அருகில் உள்ள வழித் தடங்களிலும், ஊரைச் சுற்றியுள்ள பொது இடங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பகலில் இயற்கை உபாதைகளுக்காக நீண்ட தூரம் செல்லும் மக்கள், இரவில் வெளியில் வர அச்சப்படுகின்றனர். வயல் வெளியில் உள்ள விஷ ஜந்துக்களுக்கு பயந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவில் வெளியில் வருவதே இல்லை. இதனால் உடலில் பல்வேறு பிரச்னைகள் தோன்றுவதாக வேதனை தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம், இந்த கிராமத்திற்கு அருகில் நவீன சுகாதார கழிப்பிடம் ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X