பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.10 ஆயிரம் நிவாரணம் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : மே 20, 2020
Share
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி, அஞ்செட்டி பகுதியில், இ.கம்யூ., கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கெலமங்கலம், தளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில், இ.கம்யூ., கட்சி சார்பில், கறுப்பு கொடி ஏந்தி, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில துணைத்தலைவர் லகுமையா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கொரோனா கால நெருக்கடியை சமாளித்து உயிர் வாழ, தொழிலாளர்கள், விவசாயிகள், உடலுழைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ரேஷன் கார்டில் விடுபட்டவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை, 200 நாளாக உயர்த்தி, பணிகளை வழங்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி, சீர்குலைப்பதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறந்து, கொரோனா சமூக பரவலாக மாறுவதை தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.* அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், இ.கம்யூ., கட்சி சார்பில், கறுப்பு பேட்ஜ் அணிந்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் அல்லிமுத்து, தமிழ்க்குமரன், நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


* தர்மபுரி ரயில்வே சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X