பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணை பாசன கால்வாய்கள்: ரூ.2.75 கோடியில் புனரமைப்பு பணி துவக்கம்

Added : மே 20, 2020
Share
Advertisement

ஓசூர்: கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, தமிழகத்தின் எல்லையான ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் தேக்கி வைக்கப்பட்டு, உபரி நீர் மட்டும், தென்பெண்ணை ஆற்றின் வழியாக கே.ஆர்.பி., அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதுதவிர, கெலவரப்பள்ளி அணையிலிருந்து, ஆண்டுதோறும் இருபோக பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம், 8,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 10 கி.மீ., நீளமுள்ள அணையின் வலது புற கால்வாய் மற்றும் 11.6 கி.மீ., நீளம் கொண்ட இடது புற கால்வாய்கள், புதர்மண்டி, மண் படிந்து, ஆங்காங்கு சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், அவற்றை புனரமைப்பு செய்ய வேண்டும் என, பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை மூலம் குடிமராமத்து திட்டத்தில், வலது, இடது கால்வாயின் முட்புதர்களை அகற்றி, படிந்துள்ள மண்ணை அகற்றுதல், அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில், மண்ணை கொட்டி கரையை சரி செய்து, தடுப்புச்சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதற்காக, வலது புற கால்வாய்க்கு, 30 லட்சமும், இடதுபுற கால்வாய்க்கு, 2.45 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு, நேற்று காலை புனரமைப்பு பணிகள் துவங்கின. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் பணியை துவக்கி வைத்தார். உதவி பொறியாளர்கள் சிவசங்கர், கீதாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். ஒரு மாதத்தில் புனரமைப்பு பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X