சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை சகோதரிகள் தூக்கிலிட்டு தற்கொலை

Added : மே 20, 2020
Share
Advertisement

வேலூர்: காட்பாடியில், பிளஸ் 2 படிக்கும் இரட்டை சகோதரிகள், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர். வேலூர், காட்பாடி அருகே மாருதி நகரை சேர்ந்தவர், பாலசுப்பிரமணியன், 56; இவரது மகள்கள் பத்மபிரியா, 17, ஹரிபிரியா, 17. இரட்டை சகோதரிகளான அவர்கள், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளனர். தற்போது, ஆன்லைனில் பிளஸ் 2 படித்து வந்தனர். நேற்று காலை, 10:00 மணிக்கு, ஆன்லைனில் படிக்கச்செல்வதாக கூறி, வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். நீண்ட நேரமாக அவர்கள் வராததால், அவரது தந்தை சந்தேகமடைந்து மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு இருவரும், மின்விசிறியில் ஒருசேர தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். காட்பாடி போலீசார், இருவரது உடல்களை மீட்டு, தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X