சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்டர்நெட் போனில் மிரட்டி பணம் பறிப்பு: ரவுடியை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

Added : மே 20, 2020
Share
Advertisement

வேலூர்: இன்டர்நெட் போன்காலில், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடி ஜானியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
வேலூர், காட்பாடி அடுத்த வன்றந்தாங்கலை சேர்ந்தவர் ஜானி, 35; ரவுடியான இவர் மீது, கொலை, கடத்தல், பணம் பறிப்பு, செம்மரக்கட்டை கடத்தல் போன்ற, 54 வழக்குகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்க போலீசார் திணறி வருகின்றனர். அவரின் கூட்டாளி காகிதப்பட்டரை ராஜா, 27; இவர், காட்பாடி காந்திநகரிலுள்ள ஒரு வீட்டில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தார். அவரை, விருதம்பட்டு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரவுடி ஜானி, தன் அடியாட்கள் மூலம் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். காட்பாடி அருகே, தமிழக ஆந்திரா மாநில மலைப்பகுதியில் பதுங்கி, வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், சத்துவாச்சாரியில் உள்ள தொழிலதிபர்களிடம் இன்டர்நெட் போன் காலில் மிரட்டி, பணம் பறித்து வருகிறார். அவர்கள் புகார் கொடுக்க பயந்து, அவர் கூறும் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விடுகின்றனர். கடந்த பிப்., முதல் மார்ச்., வரை, 120 வியாபாரிகள், ஜானியின் மிரட்டலுக்கு பயந்து பணத்தை வங்கிக்கணக்கில் போட்டுள்ளது, போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

சமீப காலமாக ஜானி, தன் தலைமுடியை மாற்றி புதிய கெட்டப்பில் உள்ளார். மேலும், ஜானியின் நெருங்கிய கூட்டாளியான காட்பாடி வன்றந்தாங்கலை சேர்ந்த சுபாஷ், 24, என்பவரை கடந்த, 16ல் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான ஜானிக்கு, பல வழிகளில் அவர் உதவி செய்துள்ளார். இதனால் கைதான ரவுடிகள் ராஜா, சுபாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து காட்பாடி டி.எஸ்.பி., துரைபாண்டியன் கூறியதாவது: ரவுடி ஜானி, தன்னுடைய கூட்டாளிகளிடம் இன்டர்நெட் காலில் பேசுவதால், அவர் பதுங்கியுள்ள இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதாவது துப்பு கிடைக்குமா என, தேடி வருகிறோம். தலைமறைவாக இருந்தபடியே பணம் கேட்டு, பலரை போனில் மிரட்டிக் கொண்டுதான் உள்ளார். அவரை எப்படியும் கைது செய்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X