பொது செய்தி

தமிழ்நாடு

மேற்கு வங்காளத்துக்கு 1,476 பேர் சிறப்பு ரயிலில் அனுப்பி வைப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

வேலூர்: காட்பாடியிலிருந்து சென்ற எட்டாவது சிறப்பு ரயிலில், 1,476 பேர் மேற்கு வங்காளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 1,476 பேர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, மேற்கு வங்காளம் புறப்பட்ட எட்டாவது சிறப்பு ரயிலில், அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் எஸ்.பி., பிரவேஷ்குமார் ஆகியோர் உணவு, தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். வேலூரிலிருந்து இதுவரை சென்ற, ஏழு சிறப்பு ரயில்களில் மொத்தம், 7,731 பேர் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், பீஹார் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X