சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் தர மறுத்த தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது

Added : மே 20, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, செலவுக்கு பணம் தர மறுத்த தந்தையை, வெட்டி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆனந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 65; விவசாயி; இவரது மகன் சுப்பிரமணி, 32; இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், விவசாய நிலத்தில் மாணிக்கம் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு குடிபோதையில் வந்த சுப்பிரமணி, தந்தையிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். மாணிக்கம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, அவரை கொடுவாளால் வெட்டி கொன்றார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X