பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்காலில் இருந்து ரயிலில் தி.மலை வந்த 1,214 டன் யூரியா

Added : மே 20, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: விவசாய பணிகளுக்காக, காரைக்காலில் இருந்து திருவண்ணாமலைக்கு, 1,214 டன் யூரியா ரயிலில் வந்தது. இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் கூறியதாவது: விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள வசதியாக, காரைக்கால் துறைமுகத்திலிருந்து, ரயில் மூலம், திருவண்ணாமலைக்கு, 1,214 டன் யூரியா உரம் நேற்று வந்தது. இதில், 514 டன் உரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கும், 250 டன் உரம் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும், 100 டன் உரம் டான்பெட் நிறுவனத்துக்கும், லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில், 5,200 டன் யூரியா, 2,600 டன் டி.ஏ.பி., மற்றும் 2,500 டன் பொட்டாஷ், 6,000 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று, மண்வள அட்டை பரிந்துரையின்படி, பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் 'பாயிண்ட் ஆப் சேல்' கருவி மூலம், ரசீது பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X