தினமும் 4.5 லட்சம் கவச உடைகளை தயாரிக்கும் இந்தியா| India produces 4.5 lakh PPE kits per day | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தினமும் 4.5 லட்சம் கவச உடைகளை தயாரிக்கும் இந்தியா

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share
PPE Suits, Coronavirus, India, PPE, பிபிஇ, கவச உடை, தயாரிப்பு, உற்பத்தி, இந்தியா

புதுடில்லி: 2 மாதத்திற்கு முன் கவச உடைகளை இறக்குமதி செய்து வந்த இந்தியா தற்போது நாளொன்றுக்கு 4.5 லட்சம் கவச உடைகளை உற்பத்தி செய்வதாகவும், அதற்காக 600 நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிபிஇ கிட்டுகள் எனப்படும் கவச உடைகள் வழங்கப்படுகிறது. முகக்கவசம், கண் கவசம், ஷூ கவர், கவுன் மற்றும் கை உறை ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது வெளிநாடுகளில் இருந்து இவற்றை இறக்குமதி செய்து வந்தோம்.


latest tamil newsஇரண்டு மாதங்களுக்குள் இந்த எண்ணிக்கை பூஜ்ஜியத்தில் இருந்து நாளொன்றுக்கு 4.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மே 5 அன்று 52 நிறுவனங்கள் நாளொன்றுக்கு 2.06 லட்சம் கவச உடைகளை உற்பத்தி செய்தன. இரண்டு வாரங்களில் 600 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.


latest tamil newsஇம்மாத தொடக்கத்தில் சுகாதார பணியாளர்களுக்காக 2.22 கோடி பிபிஇ கிட்டுகளை மத்திய அரசு கொள்முதல் செய்தது. அவற்றில் 1.4 கோடி கவச உடைகள் உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்டன. 80 லட்சம் கவச உடைகள் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்டன. கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் முன்னணி ஊழியர்களுக்கு கவச உடைகளுக்கான பெரும் தேவை உள்ளது. அரசுக்காக தற்போது கிராமத்தில் உள்ள சிறு நிறுவனங்களும் இவற்றை உற்பத்தி செய்கின்றன.

ஆந்திராவின் லக்காவரம் கிராமத்தைச் சேர்ந்த 200 பெண்கள் முகக்கவசங்கள், ஷூ கவர்கள் மற்றும் லேப் கோட்டுகளை மொத்தமாக தயாரித்து மாநில அரசுக்கு வழங்குகிறார்கள். ஒவ்வொரு நாளும், அவர்கள் 15,000 முகக்கவசங்கள், 6,000 ஷூ கவர்கள் மற்றும் 5,000 லேப் கோட்டுகளை உற்பத்தி செய்கிறார்கள்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X