இது ஒற்றுமைக்கான நேரம்: உலக சுகாதார அமைப்பிற்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு| European Union backs WHO after Trump's new threat | Dinamalar

இது ஒற்றுமைக்கான நேரம்: உலக சுகாதார அமைப்பிற்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share
European Union, WHO, Trump, coronavirus outbreak, ஐரோப்பிய யூனியன், உலக சுகாதார அமைப்பு, ஒற்றுமைக்கான நேரம்

ஜெனீவா: உலக சுகாதார அமைப்பின் மீது, அமெரிக்கா குற்றம்சாட்டி, நிதியை நிரந்தரமாக நிறுத்த நேரிடும் என மிரட்டல் விடுத்த நிலையில், ஐரோப்பிய யூனியன், உலக சுகாதார அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து, ‛இது ஒற்றுமைக்கான நேரம்' என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்கிடையே உலக சுகாதார அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்புக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர் வரை அமெரிக்கா நிதியுதவி அளிக்கிறது. ஆனால் சீனா, 38 மில்லியன் டாலர் நிதியுதவி செய்கிறது. கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு, சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதனால், உலக சுகாதார அமைப்புக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் வலுத்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ‛அடுத்த 30 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் தொடர்பாக அடுத்தகட்ட மேம்பாடுகளுக்கான நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு எடுக்கவில்லை எனில், நிரந்தரமாக நிதியை நிறுத்த நேரிடும்,' என மிரட்டல் விடுத்தார்.


latest tamil news


இந்த நிலையில் உலக சுகாதார அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் தரப்பில், “இது ஒற்றுமைக்கான நேரம். குற்றத்தைச் சுட்டிக்காட்டி பல தரப்பு ஒற்றுமையைக் குறைப்பதற்கான நேரம் அல்ல. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு எடுக்கும் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். மேலும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு முன்னரே நிதி அளித்திருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X