'கொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்': உலக வங்கி

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

வாஷிங்டன்: 'கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியால், உலகெங்கும் ஆறு கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்' என, உலக வங்கி தெரிவித்துள்ளது.



latest tamil news



உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளதாவது:

உலக வங்கி மூலம் தற்போது, 100 நாடுகளில் உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கானவர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்; பட்டினிச் சாவுகள் தவிர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடியால், நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வறுமை ஒழிப்பில் பெறப்பட்ட நற்பலன்கள் அனைத்தையும் இழந்து விட்டோம். கொரோனாவால் உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள், தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்.


latest tamil news



இதனால், அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் நாடுகளில் அடுத்த, 15 மாதங்களுக்கு, 16,000 கோடி அமெரிக்க டாலர்கள் (160 பில்லியன்) செலவிடத் திட்டமிட்டுள்ளோம். அரசுகளும் அமைப்புகளும் பகைமையை மறந்து, வறுமை ஒழிப்பில் தீவிரமாக செயல்பட வேண்டிய காலம் இது.

இவ்வாறு டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-202014:01:16 IST Report Abuse
Sriram V Are you ready to ask for compensation from China
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
20-மே-202013:58:53 IST Report Abuse
ocean kadappa india ஊரடங்குகள் பணக்காரனையும் ஏழையாக்கி விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X