ஆப்ரிக்க அரசுகளிடம் பாடம் கற்க வேண்டும்: ஐ.நா பொதுச் செயலர்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜெனீவா: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல ஆப்ரிக்க நாடுகள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளிலிருந்து வளர்ந்த நாடுகள் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் புதன்கிழமை தெரிவித்தார்.இதுவரை ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பதிவாகியுள்ள 88,000 கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கையில் 3,000க்கும் குறைவானவர்களே இறந்துள்ளனர். இது உலகளவில் 3,20,000க்கும் மேற்பட்ட
UN, Antonio Guterres, Coronavirus, ஐநா, ஆப்ரிக்கா, நாடுகள், கொரோனா, பாதிப்பு, பாடம், கற்க வேண்டும், பொதுசெயலர்

ஜெனீவா: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல ஆப்ரிக்க நாடுகள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளிலிருந்து வளர்ந்த நாடுகள் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் புதன்கிழமை தெரிவித்தார்.

இதுவரை ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பதிவாகியுள்ள 88,000 கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கையில் 3,000க்கும் குறைவானவர்களே இறந்துள்ளனர். இது உலகளவில் 3,20,000க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் ஒப்பிடும்போது குறைந்த எண்ணிக்கை ஆகும். இது பற்றி பிரான்ஸ் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த ஐ.நா பொதுச் செயலர், “ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் நாங்கள் கணித்ததை விட மிக மெதுவாகவே உள்ளது. பெரும்பாலான ஆப்ரிக்க அரசாங்கங்களும் அமைப்புகளும், வளர்ந்த நாடுகள் கூட எடுக்காத மிகவும் துணிச்சலான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தன. அவை சில வளர்ந்த நாடுகளுக்கு ஒரு படிப்பினை அளிக்கின்றன,” என்றார்.


latest tamil news


பெயர் குறிப்பிடாமல் சில வளர்ந்த நாடுகள் என அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை அன்டோனியா குடரெஸ் குற்றம்சாட்டியிருப்பதாக கூறுகின்றனர். மேலும் அப்பேட்டியில் ஏழ்மையான நாடுகளுக்கான கடனைத் திருப்பிச் செலுத்துவதை இன்னும் முறைப்படுத்த வேண்டும் என்றும் குடெரெஸ் அழைப்பு விடுத்தார். கடந்த மாதம், ஜி 20 மற்றும் பாரிஸ் கிளப் கடன் வழங்குநர்கள், கொரோனா வைரஸ் நெருக்கடியின் விளைவாக உலகின் ஏழ்மையான நாடுகளின் 2020-ம் ஆண்டுக்கான பெரும்பாலான கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்டனர். ஆனால் குடெரெஸ் இந்த நடவடிக்கையை போதாது விரிவான கடன் நிவாரனம் தேவை என்று கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUNDRATTHU BAALAA - TPK., MARUTHA,இந்தியா
20-மே-202016:14:06 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA already thousands of pple are dying in under developed countries - coz of famine, starvation, drought, etc.. in between corona toooo... so such pple wont bother about this.. ERIYIRA KOLLIYILA EDHU NALLA KOLLI... 6lum saavu..100lum saavu..
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-202014:00:10 IST Report Abuse
Sriram V First take action against creator and super spreader of virus. Hope you understand it's china
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
20-மே-202015:00:09 IST Report Abuse
dandy. ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X