அம்பான் என்ற கொம்பன்: ஒடிசா, மே.வங்கத்தை மிரட்டும் புயல்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோல்கட்டா: வங்க கடலில் உருவான அம்பான் புயல் மிகத் தீவிர புயலாக வங்கக்கடலில் சுழன்று வருகிறது. இந்த புயல் இன்று மாலை மேற்கு வங்கத்தில் கரையை கடக்க உள்ளது.இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், மழை பெய்து வருகிறது. இன்று (மே20) காலை முதல் பல இடங்களில் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருகிறது. மக்கள் வீடுகளிலேயே இருக்க
Cyclone Amphan, Cyclone, Storm, Weather update ,புயல்,மழை,வானிலை, அம்பான், மே.வங்கம், மேற்குவங்கம், ஒடிசா, ஒரிசா, மத்தியஅரசு, மாநிலங்கள்

கோல்கட்டா: வங்க கடலில் உருவான அம்பான் புயல் மிகத் தீவிர புயலாக வங்கக்கடலில் சுழன்று வருகிறது. இந்த புயல் இன்று மாலை மேற்கு வங்கத்தில் கரையை கடக்க உள்ளது.

இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், மழை பெய்து வருகிறது. இன்று (மே20) காலை முதல் பல இடங்களில் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருகிறது. மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என என்டிஆர்எப் எனப்படும் தேசிய பேரிடர் மீட்பு படை வேண்டுகோள் விடுத்துள்ளது.


latest tamil news
தயார் நிலையில் கப்பல்புயல் முன்னெச்சரிக்கை காரணமாக,மே.வங்கம் மற்றும் ஒடிசாவில் 4 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் கரையை கடக்கும் போது, மே. வங்கத்தின் திகா, வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளில் மணிக்கு 185 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடற்படை தயார் நிலையில் வைக்கப்படுகிறது. இதற்காக ஆந்திர கடற்கரையில், கடற்படை கப்பல் ஒன்று தயார் நிலையில் உள்ளது.


விமான நிலையம் மூடல்


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோல்கட்டா விமான நிலையம் நாளை காலை 5 மணி வரை மூடப்பட்டுள்ளது.


வேண்டுகோள்இந்த புயலால் மே.வங்கத்தின் 7 மாவட்டங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என தெரிகிறது. ஒடிசாவின் பாரதீப் மாவட்டம் மற்றும் மே.வங்கத்தின் 24 பாரகன்ஸ் மாவட்டத்தில் இன்று (மே.20) காலை முதல் பலத்த காற்று வீசி வருகிறது. மேற்கு வங்க கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என முதல்வர் மம்தா அறிவுறுத்தியுள்ளார். நிலைமை சீரடைந்ததாக அறிவிக்கப்படும் வரை மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தள்ளார்.


latest tamil news
மத்திய அரசு உறுதிபுயல் பாதிப்பு குறித்து மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த புயல் தொடர்பாக நேற்று முன்தினம் மாலை பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு உதவி செய்யப்படும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.


சவால்என்டிஆர்எப் தலைவர் எஸ்என் பிரதான் கூறுகையில், புயலும், கொரோனா வைரஸ் பணிகளும் கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது. இரு மாநிலங்களில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் சமூக இடைவெளி விட்டு தங்கியிருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் ஆயிரம் பேர் தங்கியிருக்க வசதி இருந்தால் 500 பேர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம் எனக்கூறினார். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மீட்பு பணியில் ஈடுபட என்டிஆர்எப் பின் 40 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


latest tamil newsபுயல் கரையை கடக்கும் போது, பொருட்கள் காற்றில் தூக்கி வீசப்படவும், மின்கம்பங்கள் முறிந்து விழவும் வாய்பபு உள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அலைகள் 6 மீட்டர் உயரத்திற்கு எழும் வாய்ப்பு உள்ளதால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
20-மே-202013:56:40 IST Report Abuse
ديفيد رافائيل என்னோட area ல பயங்கர வெயில் தான் இருக்கு.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
20-மே-202013:51:48 IST Report Abuse
sundarsvpr koraanaavil arasiyal vilaiyaadiyathu.unmai nilaiya ariya mathiya kulu varugaiyai mamthaa virumbavillai. aanaal puyalai thaduka mudiyaathu.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X