பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் இருந்து ராஜஸ்தானுக்கு 35 பேர் வழியனுப்பி வைப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில் இருந்து, ராஜஸ்தான் மாநிலத்துக்கு, 35 பேர் நேற்று வழியனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல விண்ணப்பித்து வருகின்றனர். அதில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, பெண்கள், குழந்தைகள் உள்பட, 35 பேர் நேற்று அரசு பஸ் மூலம் கரூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து, கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் அனைவரும், சிறப்பு ரயில்கள் மூலம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு செல்ல உள்ளனர். முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு, உணவு, குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட் வழங்கி, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் வழியனுப்பி வைத்தார். ஆர்.டி.ஓ., சந்தியா, தாசில்தார் அமுதா உள்ளிட்ட, வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X