பொது செய்தி

தமிழ்நாடு

வாழை இலைகளை லாபகரமாக விற்க வேண்டுமா? ஆராய்ச்சி மையம் ஆலோசனை

Added : மே 20, 2020
Share
Advertisement

கரூர்: ஊரடங்கு காலத்தில், வாழை இலைகளை நஷ்டம் இல்லாமல் விற்பனை செய்ய, திருச்சியில் செயல்பட்டு வரும், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் ஆண்டுதோறும், 400 கோடி முதல், 500 கோடி ரூபாய் வரை, வாழை இலை வர்த்தகம் நடக்கிறது. வாழையை இலைகளுக்காக சாகுபடி செய்யும் போது, நான்கரை மாதங்கள் கழித்து, நாள்தோறும் அறுவடை செய்து வருமானம் பெற முடியும். ஒரு ஏக்கரில் மாதம், 20 ஆயிரம் ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை வாழை இலை மூலம் வருமானம் ஈட்ட முடியும். தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களிலும், தூத்துக்குடி, கடலூர், தேனி, ஈரோடு, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் பூவன், கற்பூரவள்ளி, மொந்தன், நாட்டு மொந்தன் வாழை ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஊரடங்கு உத்தரவுக்கு முன், 200 இலைகள் கொண்ட, ஒரு கட்டு, 1,000 ரூபாய், முதல், 2,000 ரூபாய் வரை விற்பனையானது. விசேஷ நாட்களில், 2,000 ரூபாய் முதல், 2,500 ரூபாய் வரை விலை போனது. ஆனால், ஊரடங்கு காலத்தில், வாழை இலைகளின் தேவை குறைந்ததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாழை இலையை லாபகரமாக விற்பனை செய்ய, திருச்சியில் இயங்கி வரும், தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: உழவர் சந்தைகள், தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள், உழவர் ஒருங்கிணைப்பாளர், உற்பத்தியாளர் குழுக்கள், நிறுவனத்தை தொடர்பு கொண்டு வாழை இலைகளை விற்கலாம். பார்சல் உணவுக்கு அனுமதி உள்ளதால், ஓட்டல்களில் இலைகளை விற்கலாம். வாழை இலைகளை குறைந்த வெப்ப நிலையில் உள்ள, அரசு, தனியார் குளிர்பதன கிடங்குகளில், 15 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்க கட்டணம் கிடையாது. இந்த வழிமுறைகளை கையாண்டு, விவசாயிகள் வாழை இலை வியாபாரத்தில் நஷ்டத்தை தவிர்த்து, லாபம் பெறலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை, 0431-2618125 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X