பொது செய்தி

தமிழ்நாடு

மதுபான கடையில் இரவு நேர பாதுகாப்பில் பெண் போலீசார்: அச்சத்தில் குடும்பத்தினர்

Added : மே 20, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள, டாஸ்மாக் கடைகளில், இரவு நேர பாதுகாப்பு பணிக்கு பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த, 7ல் திறக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால், 8ல் மூடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தில், டாஸ்மாக் கடைகளில் இருந்து, மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக, ஐந்து டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்து, பிறகு ஜாமினில் விடுதலை செய்தனர். இதனால், டாஸ்மாக் கடைகளுக்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். குறிப்பாக பெண் போலீசார், ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்கள் பாதுகாப்பில் இருந்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி மீண்டும் கடந்த, 16ல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலை, 10:00 முதல், மாலை, 7:00 மணி வரை கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இரவு, 7:00 மணிக்கு கடைகள் மூடப்பட்டவுடன், மீண்டும் பெண் போலீசாருக்கு, பாதுகாப்பு பணி போடப்பட்டுள்ளது. கரூர் நகரப்பகுதியை தாண்டிய இடங்களிலும், பெண் போலீசார் தனியாக விடிய விடிய, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில், மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகு, கொலை சம்பவங்கள், தகராறு, அடிதடி போன்றவை பதிவாகியுள்ளன. இந்நிலையில், பல இடங்களில் மதுபான கடை பாதுகாப்புக்கு, பெண் போலீசார் இரவு நேரத்தில் அனுப்பப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். எனவே, பெண் போலீசார், ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்களை, டாஸ்மாக் கடை முன், இரவு நேரத்தில் பாதுகாப்புக்கு நிறுத்துவதை தவிர்க்க, மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X