பொது செய்தி

தமிழ்நாடு

திருமண மண்டபங்களில் விழா: டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம் மனு

Added : மே 20, 2020
Share
Advertisement

கரூர்: திருமண மண்டபங்களில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன், குடும்ப விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு டென்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: திருமண நிகழ்ச்சிகளின் வாயிலாக டெக்கரேட்டர்கள், ஒளி, ஒலி அமைப்பாளர், பந்தல், சமையல், போட்டோ, வீடியோ, வாடகை பாத்திர உட்பட பல்வேறு தரப்பினர் தொழில் செய்து வருகின்றனர். தற்போது, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருமண நிகழ்ச்சிகளில், குறிப்பிட்ட நபர்கள் கலந்து கொள்ளலாம் என, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத திருமண மண்டபங்களில், குடும்ப விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். 200 பேர் அமரும் மண்டபங்களில், 50 சதவீதம் பேர் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X