பொது செய்தி

தமிழ்நாடு

புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுமா? மோகனூர் மக்கள் எதிர்பார்ப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'மோகனூர் நகர பகுதியில், மின் தடையை தவிர்க்கவும், பழுதை விரைந்து சரி செய்யவும், கூடுதலாக துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 17 துணை மின் நிலையங்கள் உள்ளன. அதன் மூலம், தொழில் நிறுவனம், வர்த்தக நிறுவனம், வங்கிகள், கணினி மையம், குடியிருப்புகள் ஆகியவை இணைப்பு பெற்று மின்சாரம் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்துக்கு உள்பட்ட, மோகனூரில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பேரூராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகம், சர்க்கரை ஆலை, தேங்காய் நார் ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், கோரை, வாழை போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அவற்றுக்கு, முறையாக தண்ணீர் பாய்ச்சுவதற்கு, மின்சாரம் அத்தியாவசிய தேவையாகிறது. அதேபோல், குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மின் இணைப்பு பெற்று, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிதாக அமைந்துள்ள மோகனூர் தாலுகாவில், வாழவந்தி மற்றும் வளையப்பட்டியில், துணை மின் நிலையங்கள் அமைந்துள்ளன. அவற்றின் மூலம், விவசாயம், குடியிருப்பு என, மொத்தம், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் பெற்றுள்ளன. இந்த மின் நிலையங்கள் மூலம், 15 முதல், 20 கி.மீ., சுற்றளவுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, இப்பகுதிகளில், அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன. அதனால், பலத்த காற்று வீசும்போதும், கனமழை பெய்யும் போதும், மட்டைகள் உயர் அழுத்த மின் கம்பியில் விழுகின்றன. அவற்றை கண்டுபிடித்து, அகற்றியபின், மீண்டும் மின் இணைப்பு வழங்குவதற்குள், பல மணி நேரமாகிவிடுகிறது. அதனால், மக்கள் மட்டும் இன்றி, தொழிற்சாலைகளின் இயக்கம், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து, விவசாயிகள் சிலர் கூறியதாவது: மோகனூர் தாலுகாவில், இரண்டு துணை மின் நிலையங்கள் இருந்தும், மழை காலம், காற்று வீசும் காலங்களில், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. அதனால், கூடுதலாக ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். அதன் மூலம், மோகனூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், மின் தடை ஏற்படுவதை தவிர்க்க முடியும். மேலும், மின் தடையை விரைந்து நிவர்த்தி செய்யவும் வாய்ப்பாக அமையும். மக்கள் நலன் கருதி, மோகனூர் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X