2,600 டன் அரிசி நாமக்கல் வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2,600 டன் அரிசி நாமக்கல் வரத்து

Added : மே 20, 2020
Share

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளுக்கு தேவையான விலையில்லா அரிசி வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில் வரவழைக்கப்படுகிறது. அந்த வகையில், 2,600 டன் ரேஷன் அரிசி, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், நாமக்கல் வந்தது. இந்த அரிசி மூட்டைகள், 120க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X