நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் பெரும்பாலான வங்கிகளில், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் விதிமுறையை காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரடங்கில் ஓட்டல், டீ கடை, பேக்கரி, மளிகை, குளிர் சாதனம் இல்லாத நகைக்கடை உள்ளிட்ட சில கடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு அலுவலகங்கள் நேற்று முதல், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின. கடந்த, 50 நாட்களில், 'சீல்' வைக்கப்பட்ட பகுதியில் உள்ள வங்கிகளைத்தவிர மற்ற வங்கிகள் வழக்கம் போல் இயக்கத் துவங்கின. இந்நிலையில், நாமக்கல் நகர் பகுதியில், 'சீல்' வைக்கப்பட்ட பகுதியான ரங்கர் சன்னதி சாலை, கடந்த வாரம் தளர்வு செய்யப்பட்டது. அங்கு, வங்கிகள் செயல்படுகின்றன. தற்போது, அங்குள்ள பொதுத்துறை வங்கியில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அவ்வாறு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் உள்ளனர். ஏ.டி.எம்., அறையிலும் அவ்வாறே கூடியுள்ளனர். அதனால் கொரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளது. எனவே, சமூக இடைவெளியை பின்பற்ற வாடிக்கையாளர்களை வங்கி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE