பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் விளை நிலங்கள் தற்போது கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டன. கடந்த ஆகஸ்டில் மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதை பயன்படுத்தி பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். ஜனவரியில் அறுவடை செய்யப்பட்டது. தொடர்ந்து சில மாதங்களாக மழை இல்லை. ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை எதிர்பார்த்தளவு பெய்யாததால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், விளைநிலங்களில் புற்கள் வளர்ந்துள்ளன. அவை, கால்நடைகளுக்கு ஏற்ற தீவனமாக பயன்படுவதால், தற்போது மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE