சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் முதியவர் பலி

Added : மே 20, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: மின்னாம்பள்ளியில், சாலையை கடக்க முயன்ற முதியவர், இருசக்கர வாகனம் மோதி பலியானார். மல்லசமுத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் இளங்குமணி, 85. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், மின்னாம்பள்ளி பஸ்நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே சென்ற பஜாஜ் சிடி-100 பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த, ஜேடர்பாளையம் தொப்பபட்டியை சேர்ந்த பெயின்டர் ரஞ்சித், 30, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X