சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்.ஐ.சி., முகவர் மீது தாக்குதல்: நாமக்கல்லில் 2 பேர் கைது

Added : மே 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் அடுத்த, ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல், 38. எல்.ஐ.சி., முகவராக பணியாற்றி வருகிறார். அவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மளிகை கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, நாமக்கல் பட்டறைமேடு பகுதியில், வாலிபர்கள் சிலர் தகராறு செய்து கொண்டிருந்தனர். அதை தங்கவேல் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்தவர்கள், தங்கவேலை கட்டையால் தாக்கினர். அதில், படுகாயம் அடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து, கணேசபுரத்தை சேர்ந்த கண்ணன், 25, அண்ணாநகர் பரணிதரன், 24, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர். தலைமறைவான, இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X