சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பிடையே அடிதடி: வாலிபர் கைது

Added : மே 20, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட அடிதடி சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். குமாரபாளையம் அடுத்த, சடையம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால், 40; கூலி தொழிலாளி. இவரது பெற்றோர் முனியப்பன், 65, சரஸ்வதி, 35. ஆனங்கூர் சாலை, காவடியான்காடு பகுதியில் வசிக்கின்றனர். நேற்றுமுன்தினம் மதியம், 2:00 மணியளவில் இவர்கள் வீட்டின் அருகே வந்த சிவதாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி, 39, கல்லங்காட்டுவலசை சேர்ந்த மணிகண்டன், 29, ஆகியோர், கோபால் குடும்பத்தை அவதூறாக பேசியதாக தெரிகிறது. தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு கோபால், சரஸ்வதி, முனியப்பன் பலத்த காயமடைந்தனர். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினர் மீதும் குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X