சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பியை கொன்ற வழக்கு: தலைமறைவாகியிருந்த அண்ணன் கைது

Added : மே 20, 2020
Share
Advertisement

எருமப்பட்டி: எருமப்பட்டி அடுத்த போடிநாயக்கன்பட்டி கோம்பைகாட்டை சேர்ந்த சுப்ரமணி மகன்கள் சரவணமூர்த்தி, 41, செந்தில்ராஜ், 36. அதில், சரவணமூர்த்தி, நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மோகனூர் அருகே லத்து வாடியில் உள்ள ஆவின் பால் பண்ணையில், செந்தில்ராஜூ, விரிவாக்க அலுவலராக பணியாற்றி வந்தார். செந்தில்ராஜூக்கு, இரண்டு முறை திருமணமாகி, இரண்டு மனைவிகளும் பிரிந்து விட்டனர். சரவணமூர்த்திக்கு, ரம்யா, 32, என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர் நிலம் செந்தில்ராஜ் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை தன் பெயருக்கு எழுதித்தரும்படி, சரவணமூர்த்தி, செந்தில்ராஜிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் மறுத்து விட்டார். அதனால், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், மார்ச், 1ல், சரவணமூர்த்தி, ரம்யா மற்றும் ஐந்து பேர் கொண்ட கும்பல், செந்தில்ராஜை தாக்கியுள்ளனர். அதில், படுகாயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, குளுகோசில் விஷம் கலந்தனர். அதையடுத்து, மேல் சிகிச்சைக்காக, கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி, காரில் சுற்றியுள்ளனர். ஆனால், வழியிலேயே உயிரிழந்தார். எருமபட்டி போலீசார் வழக்கு பதிந்து, ரம்யா மற்றும் கூலிப்படையை கைது செய்தனர். சரவணமூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, காரில் வந்த சரவணமூர்த்தியை எருமப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X