சேதமடைந்த சாலையால் பயணிகள் அவதி

Added : மே 20, 2020
Share
Advertisement

கொல்லிமலை: கொல்லிமலையில், நம்ம அருவிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். கொல்லிமலையில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் நம்ம அருவியும் ஒன்று. குழந்தைகள் முதல், பெரியவர் வரை சென்று பயமின்றி குளிக்கும் இடமாக இது உள்ளதால், எப்போதும் சீசன் சமயத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் நம்ம அருவிக்கு செல்லும் சாலை மற்றும் நம்ம அருவியில் இருந்து அரப்பளீஸ்வரர் கோவில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இரண்டு சக்கர வாகனங்களே செல்ல முடியாத அளவு ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளன. சொகுசு கார்கள் இதில் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. மீண்டும் அக்டோபர், நவம்பரில் சீசன் தொடங்கும் முன், இந்த சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என, பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X