சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல்போனில் 'பப்ஜி கேம்': மாரடைப்பால் சிறுவன் மரணம்

Added : மே 20, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில் மொபைல் போனில், 'பப்ஜி கேம்' விளையாடிய, 16 வயது சிறுவன் மாராடைப்பால் மரணமடைந்தது, சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு, கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்ந்த, குமார் மகன் சதீஷ்குமார், 16; நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தனியார் பாலிடெக்னிக்கில், மெக்கானிக்கல் முதலாமாண்டு படித்து வந்தார். சதீஷ்குமார் தன் மொபைல்போனில், 'பப்ஜி கேமை' ஆன்லைனில் நண்பர்களுடன் குழுவாக விளையாடுவது வழக்கம். நேற்று முன்தினம் மதியம், வீட்டுக்கு அருகில், மாட்டுச்சந்தை திடலில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். கொரோனா ஊரடங்கால், சிறுவர் முதல், பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினரும், நீண்ட நேரம் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால், 16 வயது சிறுவன் இறந்தது அதிர்ச்சி அளிப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X