பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதலாக 'கடைகள்' திறப்பு: குடைகளுக்கு ரூ.20 வாடகை

Added : மே 20, 2020
Share
Advertisement

ஈரோடு: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில், 203 டாஸ்மாக் கடைகளில், 143 கடைகள் முதலில் திறக்கப்பட்டன. மாநகர், நகராட்சி பகுதியில் தனிமை பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. தற்போது அனைத்து பகுதியிலும் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நேற்று முதல் தனிமைப்பகுதிக்கு சற்று அருகில் உள்ள, 38 கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. முதல், இரண்டாவது நாளில் ஒவ்வொரு கடையிலும், 500 டோக்கன் வழங்கினாலும், தேவைக்கேற்ப மதுபானங்களை பெற்று சென்றதால், நேற்று கூட்டம் குறைந்தது. முதல் இரண்டு தினங்களை ஒப்பிடுகையில், நேற்று விற்பனை குறைந்தது. குடை கொண்டு வராதவர்களுக்காக, மதுக்கடைக்கு அருகே சிலர், 20 ரூபாய்க்கு குடைகளை வாடகைக்கு விட்டனர். ஒரு சிலர் விலைக்கும் வாங்கி சென்றனர். ஆனாலும், வாடகைக்கு வாங்கி சென்றவர்கள் அதிகம் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X