பொது செய்தி

தமிழ்நாடு

மண்பாண்ட தொழிலாளர் நிவாரணம் தர வலியுறுத்தல்

Added : மே 20, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்ட குலாலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் வெங்கடாசலம், ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் மனு வழங்கி, நலவாரியத்தில் பதிவு செய்யாத மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் நிதியுதவி வழங்க கோரினார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கட்டட தொழிலாளர் நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு, கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கியது போல, மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஈரோடு மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள், இரண்டு மாதங்களாக, மண் பானை உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமல், வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தற்போது தளர்வு வழங்கப்பட்டுள்ளதால், மூலப்பொருட்கள், மண்பாண்டங்களை வண்டிகளில் கொண்டு செல்ல உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X