பொது சுகாதார வளாகத்திற்கு அடிப்படை வசதி கேட்டு மனு

Added : மே 20, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட, நாப்பாளையம் பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் அருகிலுள்ள இடத்தில், பொது கழிப்பிடம் உள்ளது. தற்போது, கழிப்பிடத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கழிப்பிடம் அருகில், மின்விளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் ஆங்காங்கு மது குடிப்பவர்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக நகராட்சி கமிஷனர் மோகன்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து மோகன்குமார் கூறுகையில்,''பொது சுகாதார வளாகத்தில், குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. பணியாளர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் பழுது ஏற்பட்டுள்ள, மின் விளக்கு சரி செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X