பள்ளிபாளையம்: ''பள்ளிபாளையம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடத்தில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்,'' என, விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது: பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. விசைத்தறி கூடத்தில் தினந்தோறும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறைவான ஆட்களை கொண்டு பணி புரிய வேண்டும். கை கழுவ சோப்பு, தண்ணீர் வைக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளையும், பாதுகாப்பு முறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE