பொது செய்தி

தமிழ்நாடு

முட்டை விலை 355 காசாக நிர்ணயம்

Added : மே 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 355 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. அதில், 350 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, ஐந்து காசு உயர்த்தி, 355 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை உள்ளிட்ட, ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில், ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டு, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால், முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த, ஒரு வாரத்தில், 40 காசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 375, ஐதராபாத், 340, விஜயவாடா, 333, பர்வாலா, 270, மும்பை, 375, மைசூரூ, 362, பெங்களூரு, 355, கோல்கட்டா, 350, டில்லி, 305. கிலோ, 83 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையிலும், 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X