பொது செய்தி

தமிழ்நாடு

மின்கட்டணம் எகிறியதால் 'ஷாக்': கணக்கீட்டில் குளறுபடி?

Added : மே 20, 2020
Share
Advertisement

மேட்டூர்: மின்கட்டணம் வெகுவாக உயர்ந்ததால், நுகர்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதா என, சந்தேகம் எழுந்துள்ளது.
ஊரடங்கால், மின்கட்டணம் செலுத்த, வாரியம், நுகர்வோருக்கு கால அவகாசம் வழங்கியது. இரு மாதமாக நிறுத்திவைத்திருந்த மின் கணக்கீட்டு பணியை, கடந்த, 6ல் வாரியம் தொடங்கியது. இதில், மேட்டூர், ஆஸ்பத்திரி காலனி, குமரன் நகர் பகுதிகளில், வீடுகளில் பயன்டுத்திய மின்சாரத்துக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட, அந்த கட்டணம் வெகுவாக உயர்ந்திருந்ததால், நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, ஆஸ்பத்திரி காலனி முருகன் வெங்கடாசலம் கூறியதாவது: என் வீட்டுக்கு, சில மாதமாக, 150 முதல், 200 ரூபாய் மின் கட்டணம் செலுத்தினேன். நடப்பு மாதம், 2,968 ரூபாய் வந்துள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. இதுபோல், சராசரியாக, 3,000 ரூபாய் மின் கட்டணம் செலுத்தும் நண்பருக்கு, 12 ஆயிரத்து, 208 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேட்டூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி கூறுகையில், ''மின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்த்த வாய்ப்பில்லை. இதுதொடர்பாக புகார் தெரிவித்தால், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X