பொது செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் விண்ணப்பித்த மாணவர் விபரம் அனுப்பிவைக்க உத்தரவு

Added : மே 20, 2020
Share
Advertisement

சேலம்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், வெளி மாவட்டங்களில் சிக்கியவர்களின் இ - பாஸ் விபரம் அனுப்ப, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஜூன், 15 முதல், 10ம் வகுப்பு தேர்வு உள்ளிட்ட பொதுத்தேர்வு கள் நடத்தப்படவுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில், ஏராளமான மாணவர்கள், வேறு ஊர்களில் உள்ளனர். மாவட்டம் விட்டு, மாவட்டம் வர, தற்போது இ - பாஸ் பெற வேண்டியுள்ளது. இதனால், அந்த மாணவர்களின் விபரம் சேகரித்து, இ -பாஸ் பெற விண்ணப்பிக்க, தலைமையாசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அனுமதி பெறுவது, மாணவர் படிக்கும் மாவட்டத்துக்கு அழைத்து வர போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக, இ - பாஸ் விண்ணப்பித்த மாணவர்களின் விபரங்களை அனுப்பிவைக்க, தலைமையாசிரியர்களுக்கு, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X