பொது செய்தி

தமிழ்நாடு

காக்க வைக்கப்படும் டிரைவர், கண்டக்டர்கள்: அலைக்கழிப்பு செய்வதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு

Added : மே 20, 2020
Share
Advertisement
சேலம்: சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில், பஸ்கள் இயக்கப்படாத நிலையில், டிரைவர், கண்டக்டர்களை, நிர்வாகம் அலைக்கழிப்பு செய்வதாக, தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 32 பணிமனைகளின் மூலம், 2,135 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா நோய் பரவல் காரணமாக பஸ்களின் இயக்கம் தடை பட்டுள்ள

சேலம்: சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில், பஸ்கள் இயக்கப்படாத நிலையில், டிரைவர், கண்டக்டர்களை, நிர்வாகம் அலைக்கழிப்பு செய்வதாக, தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 32 பணிமனைகளின் மூலம், 2,135 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா நோய் பரவல் காரணமாக பஸ்களின் இயக்கம் தடை பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணியாளர்களின் பயன்பாட்டுக்காக மட்டும், 30 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களை, நேற்று முன்தினம் முதல் அனைவரும் பணிக்கு வரும் படி நிர்வாகம் அழைப்பு விடுத்தது. ஒவ்வொரு பணிமனைக்கும், 60 முதல், 100 பணியாளர்கள் வந்துள்ளனர். ஆனால், அவர்களிடம் வழக்கமான பணி பட்டியலில் கையொப்பம் பெறாமல் பிரத்தியேகமான நோட்டு ஒன்றில் கையொப்பம் போட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்களுக்கு பணி வழங்கப்பட வில்லை. அது மட்டுமின்றி உணவகத்தில், உணவு, டீ, காபி எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், கொரோனா நோய் பரவலை தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஒரே இடத்தில், ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பணிமனையிலும், 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஒரே இடத்தில் காக்க வைக்கப்படுவதால், அவர்களுக்கு அதிர்ச்சியையும், கொரோனா பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ., மண்டல துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: பொதுமக்களின் சேவைக்கு பஸ்களை இயக்க தொழிலாளர்களை அழைத்தால், அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தொழிலாளர்களை வரவழைத்து பணிமனைகளில் அவர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் அதிகாரிகள் காக்க வைக்கின்றனர். பணிக்காக, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, கரூர் ஆகிய இடங்களில் இருந்து, 100 கி.மீ., தூரத்துக்கும் மேலாக இருசக்கர வாகனத்தில் பயணித்து வரும் நிலையில், அவர்களுக்கு பணி வழங்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி, கொரோனா காலத்தில் பணியில் உள்ளோம் என்பதற்கு எந்தவித அத்தாட்சி கடிதம், அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால், நோய் தொற்றில் சிக்கி உயிரிழக்க நேரிட்டாலும் பிற அரசுத்துறைகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு கூட போக்குவரத்துக்கழக ஊழியர்களால் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேலம் கோட்ட நிர்வாகம், ஒவ்வொரு பணிமனைகளிலும், தேவையில்லாமல் ஊழியர்களை காக்க வைத்திருப்பதை கை விட்டு, பஸ்களை பொதுமக்களின் சேவைக்கு இயக்கும் போது மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X