பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமருக்கு மார்க்சிஸ்ட், பா.ம.க., வேண்டுகோள்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை : அச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மூலமும், எம்.பி.,க்கள் மூலமும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாக அக்கட்சி மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.அதேபோல் ,அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளை களைய பா.ம.க. துணை நிற்கும் என பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி
பத்திரிகைதுறை,  மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், பிரதமர், அச்சுத்துறை, ஊடகம்

சென்னை : அச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மூலமும், எம்.பி.,க்கள் மூலமும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாக அக்கட்சி மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.அதேபோல் ,அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளை களைய பா.ம.க. துணை நிற்கும் என பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.


மார்க்சிஸ்ட்இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோரை பத்திரிகை நிறுவனங்களை சேர்ந்த தினமலர் இல.ஆதிமூலம், இந்து என்.ராம், தினகரன் ஆர்.எம்.ஆர். ரமேஷ், ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கும் சூழ்நிலையில், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருவது குறித்தும், அதிலிருந்து மீள்வதற்கு அரசு செய்ய வேண்டியவை குறித்தும் எடுத்துரைத்தனர்.

மத்திய அரசு, பத்திரிகை அச்சு காகிதம் மீதான வரியை குறைக்க வேண்டும்; அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவை தொகைகளை உடனடியாக பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும்; நெருக்கடியை கருத்தில் கொண்டு அரசு விளம்பரக் கட்டணத்தை நூறு சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்; அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமருக்கு அளித்திருப்பதையும் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்த வேண்டுமென்றும், அச்சு ஊடகங்கள் மக்களின் குரலாக செயல்படுவதற்கு துணை நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இதை மார்க்சிஸ்ட் கட்சி பார்லிமென்ட் உறுப்பினர்கள் மூலம் பிரதமரின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டுமென கோரினர்.


latest tamil news
இந்த கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. ஜனநாயக நாட்டில் பத்திரிகைதுறை மற்றும் ஊடகங்கள் மிகவும் கேந்திரமான பங்கு வகிப்பவை. மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் பெரும் கருவியாக விளங்கி வருகின்றன. கொரோனா கொடுமையால் பொது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை அளிப்பதில் அச்சு ஊடகங்களின் பங்கு மகத்தானது. நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பத்திரிகை துறையினை பாதுகாப்பது சமூக நோக்கத்தில் அத்தியாவசியமானதாகும்.


latest tamil news
அச்சு ஊடகங்கள் செயல்பட குறைந்தபட்சம் அரசு செய்ய வேண்டிய கோரிக்கைகள்தான் இவை. ஊடகங்களின் கருத்து சுதந்திரத்திற்கும், நடுநிலை தன்மையோடு செயல்படுவதற்கும் எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி துணை நின்று வருகிறது. அச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மூலமும், எம்.பி.,க்கள் மூலமும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாக மாநில தலைவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பா.ம.க., வலியுறுத்தும்பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழும் ஊடகங்கள், கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. நாடு நெருக்கடிகளை சந்திக்கும் போது, அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு துணை நிற்கும் ஊடகங்களே இப்போது நெருக்கடியை சந்திக்கும் நிலையில், அவற்றுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை.


latest tamil newsஊடகங்களில் அச்சு ஊடகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அவை குறித்து விளக்குவதற்காக தினமலர் கோவை வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், தி இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம், தினகரன் நாளிதழின் ஆர்.எம்.ஆர். ரமேஷ் ஆகியோர் இன்று(மே20) காலை,எனது இல்லத்தில், என்னை சந்தித்து பேசினார்கள். பொருளாதார மந்தநிலை காரணமாக அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றைக் களைய அரசுத் தரப்பிலிருந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விரிவாக விளக்கினர்.

1. செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான நியூஸ் பிரிண்ட் காகிதம் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்.

2. அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

3. அரசு ஊடகங்களின் விளம்பரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டும்- ஆகியவை தான் அச்சு ஊடகத்துறையினரின் முதன்மையான கோரிக்கைகளாகும்.

இதுதொடர்பாக பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்காக அவர்கள் வழங்கிய கடிதத்தில் தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.

எனது இல்லத்தில் இருந்தவாறே பாமக நிறுவனர் ராமதாசை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்து அவர்கள் விளக்கினார்கள்.
அதைக் கேட்ட ராமதாஸ் ,'' ஊடகங்கள் எப்போதும் எங்கள் கூட்டணித் தோழர்கள். அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். மிகவும் நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் ஊடகங்களுக்கு பாமக துணை நிற்கும். அச்சு ஊடகங்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுகிறேன்; அவருக்கு கடிதம் எழுதுகிறேன். அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து நெருக்கடிகளையும் களைவதற்கு பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்'' என்று உறுதியளித்தார்.

அச்சு ஊடகங்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவது உண்மை; அதேபோன்று அவர்கள் அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. செய்தித்தாள்களின் தயாரிப்பு செலவு அதன் விற்பனை விலையை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், அதிக அளவில் விளம்பரங்கள் வந்தால் மட்டும் தான் தயாரிப்பு செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்ய முடியும். பொருளாதார நிலைமை சரியாகி தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் வருவதற்கு இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகக்கூடும் என்பதால் அதுவரை அச்சு ஊடகங்களுக்கு அதிக விளம்பரங்கள், அதிக விளம்பரக் கட்டணம் ஆகியவற்றின் மூலம் ஆதரவளிக்க வேண்டியது அரசின் தார்மிகக் கடமை ஆகும். இதை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி, ஊடகங்களுக்கு உதவும்படி பா.ம.க. வலியுறுத்தும். இவ்வாறு, அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
20-மே-202023:08:35 IST Report Abuse
unmaitamil When all section of people are managing their suffering due to Corona and world wide economy down, let the News Paper & other media owners also manage their own issues. All these Media owners are rich and if they can not manage the situation, let them stop their business. Nothing will happen to India. Non of these media owners are true to Public and to Modi Government also. Always blaming blindly and spreading false & fake news and against Hindu faith. Like Cinema, some of News Papers also must go away from this country for the betterment of India.
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
20-மே-202022:34:34 IST Report Abuse
Paramasivam ஒவ்வொரு பத்திரிக்கையும் (தினமலர் தவிர்த்து) ஒன்றுக்கு மேற்பட்ட ஊழல் அரசியல் கட்சிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அப்புறம் எதற்கு அரசு அதாவது மக்கள் வரிப்பணத்தை சலுகையாக கொடுக்க வேண்டும்? கூடாது. நீங்க நினைச்சா பத்திரிகைகளுக்கு செலவிடும் பணத்தை குறைக்கனும் என்பீர்கள். அப்புறம் அடுத்த நொடியே பணத்தை வாரி வழங்க வேண்டும் என்பீர்கள். என்ன ஒரு பித்தலாட்டம்?
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
20-மே-202021:48:49 IST Report Abuse
ஆரூர் ரங் பிரதமரை விளம்பரப் பிரியர் என கின்டலடித்த ஊடகங்கள் இப்போ அதிக அரசு விளம்பரம் வேணும்னு கெஞ்சிக் கேட்பது😃? இப்போ மோதி படம் போட்ட அரசு விளம்பரம் வேண்டாம்னு மறுக்கட்டுமே பார்ப்போம்.
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
21-மே-202004:55:20 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅரசு விளம்பரங்கள் பற்றி சொல்கிறார்கள்.. பிரதமரின் விளம்பரங்கள் இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X