பேருந்துகளை தடுத்து நிறுத்துவதா; காங்., கட்சியினர் கண்டனம்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Congress, Migran tWorkers, Bus Issue, Priyanka, Sachin Pilot, UP, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, காங்கிரஸ், புலம்பெயர், தொழிலாளர்கள், பேருந்து, நிறுத்தம், உபி, உத்தரபிரதேசம், பிரியங்கா, சச்சின்பைலட்

லக்னோ: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை காங்., ஏற்பாடு செய்தது. அதில் பல பஸ்களின் பதிவெண்கள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களின் எண்ணை கொண்டுள்ளதாக மாநில எல்லையில் உ.பி., போலீசார் பேருந்தை தடுத்து நிறுத்தினர். இதற்கு காங்., பொதுச்செயலர் பிரியங்கா, ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்து தருவதாக காங்., பொதுச்செயலர் பிரியங்கா அறிவித்திருந்தார். இதனையடுத்து காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளின் விவரங்களைத் தருமாறு அரசு கேட்டது. ஆனால், இந்தப் பட்டியலில் ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை காங்கிரஸ் கட்சி அளித்ததாக உ.பி., அரசு, பிரியங்காவின் தனிப்பட்ட செயலாளர் சந்தீப் சிங் மற்றும் உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லாலு ஆகியோர் மீது வழக்குப் பதிந்தது.

இதற்கிடையே, காங்., ஏற்பாடு செய்த பேருந்துகள் தொழிலாளர்களுடன் வேறு மாநிலங்களுக்குக் கிளம்பிய நிலையில், மாநில எல்லையில் பேருந்துகளை உ.பி. போலீஸார் தடுத்து நிறுத்தினர்.


latest tamil news


இதனையடுத்து பா.ஜ., அரசு வேண்டுமென்றே இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா பதிவிட்டுள்ளதாவது: பேருந்தில் பா.ஜ., பேனர்களை வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எங்கள் சேவைகளைத் தடுக்காதீர்கள். இந்த அரசியலினால் 3 நாட்கள் விரயம் செய்யப்பட்டு விட்டன. பல தொழிலாளர்கள் தங்கள் உயிர்களை விட்டுள்ளனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news


காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில துணை முதல்வருமான சச்சின் பைலட் கூறுகையில், பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி உணவும், வாகன வசதியும் ஏற்பாடு செய்து தருகிறது. எந்த ஒரு அரசாக இருந்தாலும் இதனை வரவேற்க வேண்டும். ஆனால் உத்தர பிரதேச அரசு அனுமதி மறுக்கிறது. பேருந்துகள் செல்ல அனுமதிக்கவில்லை, எங்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்கிறது. மோசமான அரசியல் செய்கிறது. இதனை எப்படி நியாயப்படுத்த முடியும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-மே-202004:36:02 IST Report Abuse
J.V. Iyer எங்கும் காழ்ப்புணர்வு, எதிலும் காழ்ப்புணர்வு காங்கிரஸ் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிறது. பாவம் அவர்கள் என்ன செய்தாலும், அது பாஜகவுக்கு சாதகமாகவே முடிகிறது. மக்கள் நலனில் நாட்டமில்லா காங்கிரஸ் தலைமை. இப்படி ஒரு கட்சி.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மே-202020:16:34 IST Report Abuse
தமிழ்வேல் 3 naalthaane ? . avvalavuthaan.
Rate this:
Cancel
Sapere Aude -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-202020:06:26 IST Report Abuse
Sapere Aude ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மக்களை அழைத்து செல்ல வேண்டுமானால் பேருந்துகள் செல்ல அரசு சில சாதாரண நிபந்தனைகளை வைப்பது புதிதல்லவே. இதற்கு விமர்சனம் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X