பெங்களூருவை கலக்கிய மர்ம சத்தம்: மக்கள் பீதி

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரு நகரில் இன்று ( மே 20) மதியம் 1.20 மணியளவில் திடீரென இரண்டு முறை பயங்கர சத்தம் கேட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குக்கி டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், ஒசூர் சாலை, எச்ஏஎல், பழைய மெட்ராஸ் சாலை, உல்சூர், குந்தனஹள்ளி, கமனஹள்ளி, சிவி ராமன் நகர், ஓயிட்பீல்ட் மற்றும் எச்எஸ்ஆர் லேஅவுட் போன்ற பகுதிகளில் இந்த சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த மக்கள்
Sonic boom, Bengaluru, bangalore, Old Madras Road, Ulsoor, Kundanahalli, Kamanahalli, CV Raman Nagar, பெங்களூரு,மர்மசத்தம்,

பெங்களூரு: பெங்களூரு நகரில் இன்று ( மே 20) மதியம் 1.20 மணியளவில் திடீரென இரண்டு முறை பயங்கர சத்தம் கேட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குக்கி டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், ஒசூர் சாலை, எச்ஏஎல், பழைய மெட்ராஸ் சாலை, உல்சூர், குந்தனஹள்ளி, கமனஹள்ளி, சிவி ராமன் நகர், ஓயிட்பீல்ட் மற்றும் எச்எஸ்ஆர் லேஅவுட் போன்ற பகுதிகளில் இந்த சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்தனர். பூகம்பம் ஏற்பட்டு விட்டதோ என நினைத்தோம் எனக்கூறினர். இன்னும் சிலர் பூம் என்ற சத்தம் கேட்டதாகவும், இன்னும் சிலர் பெரிய இடி போல சத்தம் கேட்டது என தெரிவித்தனர்.
சிலர், விமானத்தின் அதிவேக ஓட்டத்தின் போது கூட இப்படி சத்தம் கேட்கும் என்றனர். இது தொடர்பாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் ''bangalore '' என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளை பதிவிட அது முதலிடம் பிடித்தது.


latest tamil news


இந்த சத்தம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். விமானம் ஏதும் பறந்து சென்றதா என்பதை உறுதி செய்யும்படி விமானப்படை கட்டுப்பாட்டு அறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சில நொடிகள் ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் ஆடின. ஆனால், சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கர்நாடக தேசிய பேரிடர் கண்காணிப்பு மைய தலைவர் சீனிவாச ரெட்டி கூறுகையில், பெங்களூருவில் பூகம்பம் ஏற்படவில்லை. சில நேரங்களில் இது போன்ற பலத்த சத்தம் கேட்கும் என்றார். இந்த சத்தம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
வளி மண்டலத்தில் அதிவேக விமானங்கள் போகும்போது ஏற்படும் அதிர்வுகள் குவிந்து இதுபோன்று சத்தம் வரலாம் என்று சில வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர்.


latest tamil newsஇந்நிலையில் இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கயைில், 'சூப்பா் சானிக் இந்திய போர்ப்படை விமானம் கடந்து சென்றது தான் இந்த சப்தத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது. இத்தகவல் ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy - Bangalore,இந்தியா
22-மே-202013:17:43 IST Report Abuse
Ganapathy எனக்கென்னமோ அந்தம்மா பரப்பன அக்ராஹாரத்தில் இருந்து வெளிய வந்துட்டாங்கனு தோணுது
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
22-மே-202011:55:45 IST Report Abuse
Tamilnesan என்ன சத்தம் இந்த நேரம்........உயிரின் ஒலியா ?
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
20-மே-202021:52:57 IST Report Abuse
Krishna If Supersonic Fighters, then More sound Must Have Been from Near Yelahanka esp. Flight Take-Offs. God is Punishing Bangalore-Karnataka for Misdeeds, Linguistic Bias & Misuse of Powers by Rulers & Officials Etc. Earth-Slips Will Happen Someday in Bangalore.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X