இந்தியாவிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடி வெளியே எடுத்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடி முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர்.அமெரிக்க காங்கிரஸின் ஆய்வு மையம் பொருளாதாரம் குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின்
Foreign, Investors, India, Pandemic, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, இந்தியா, வெளிநாட்டு, முதலீட்டாளர்கள்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடி முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸின் ஆய்வு மையம் பொருளாதாரம் குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 3 கோடி மக்கள் அரசு உதவிக்காக விண்ணப்பித்துள்ளனர். ஐரோப்பிய மண்டலத்தில் 2020ன் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.8% ஆக சுருங்கியுள்ளது. இது 1995க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். அதே போல் அமெரிக்க ஜி.டி.பி 4.8% ஆக சரிந்துள்ளது. 2008 நான்காம் காலாண்டிற்கு பிறகு இத்தகைய சரிவை அமெரிக்கா சந்திக்கிறது.


latest tamil news


வளர்ந்து வரும் ஆசிய பொருளாதாரங்களில் முதலீடு செய்து இருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.2 லட்சம் கோடிகளை வெளியே எடுத்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து மட்டும் ரூ.1.2 லட்சம் கோடி முதலீடு வெளியேறியுள்ளது. இக்கொரோனா நெருக்கடி, நிலையான பொருளாதாரத்துக்கு உதவும் வகையிலான நிதி கொள்கைகளை செயல்படுத்துவதில் அரசாங்கங்களுக்கு சவாலானதாக உள்ளது. இதனால் பெரும்பாலான முக்கிய பொருளாதாரங்கள் ஆட்டம் கண்டுள்ளன. இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா நாடுகள் மட்டுமே 2020ல் சிறிய அளவில் வளர்ச்சி காணும்.


latest tamil news


வைரஸ் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் உலகளவில் 150 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கினால் வியாபார மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் விமானப் போக்குவரத்து, சொகுசு கப்பல்கள், ஹோட்டல் துறையினர் பல லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டு இத்துறைகளின் பல நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படும்.


latest tamil news


மேலும், சீனாவில் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதால் கணினிகள், அலைபேசிகள், பொம்மைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வது தாமதமாகும். ஏராளமான வாகன உற்பத்தியாளர்கள் உதிரி பாகங்களுக்கு சீனாவை நம்பியிருப்பதால் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
21-மே-202008:07:17 IST Report Abuse
Aaaaa இதைப்பற்றி நிர்மலா ஒன்றுமே சொல்லவில்லை
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
20-மே-202019:57:20 IST Report Abuse
madhavan rajan The media never gave news how much input was made by the foreigners when the market was going steady. I think will media will only project negative things to be made known to the public. Is this a good tread? Media will never state how much was the gain for the investors when the market is showing up trend. But will highlight that thousands of crores loss due to the declining trend of the market, which is not a fair display of things. It would have risen 2000 points and declined about 150 points but the projection will be like the whole investors have lost their sealth, which is false.
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
20-மே-202018:29:58 IST Report Abuse
Natarajan Ramasamy FDI is always RISKY> We must not depend on them for developing our economy.Development with FDI is MAYAForeign investors will run to SAFE HEAVEN (USA )whenever there is RISK. Strengthen our economy by good production. DO NOT ENCOURAGE LAZY . THEY ARE BOURDON ON ECONOMY.
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
20-மே-202019:38:42 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்Well said...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X