பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பில் முன்னோடி மாவட்டமாகிறது தூத்துக்குடி: கலக்கும் கலெக்டர்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருநெல்வேலி: கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துாத்துக்குடி மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காத்திடவும். நோய் தொற்று பராவாமல் தடுக்கவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த 3ம் தேதி துாத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும்
தூத்துக்குடி, கலெக்டர், சந்தீப்நந்தூரி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, தடுப்பு பணி, பாராட்டு, Thoothukudi, fights against coronavirus, Coronavirus, Corona, Covid-19, tamil nadu

திருநெல்வேலி: கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துாத்துக்குடி மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காத்திடவும். நோய் தொற்று பராவாமல் தடுக்கவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த 3ம் தேதி துாத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து நோய்தொற்றுடன் வருபவர்களை கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
துாத்துக்குடி மாவட்டத்தில் இப்பணியினை கலெக்டர் சந்தீப் நந்துாரி சிறப்பாக மேற்கொண்டுவருகிறார். மார்ச் மாத துவக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நோய் தொற்றுகள் பரவியபோது, சம்பந்தப்பட்டஅனைத்து கிராமங்களுக்கும் காலையிலேயே செல்வதை வழக்கமாகக் கொண்டார்.


latest tamil news
கலெக்டரே காலையில் செல்வதால், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் அங்கு கிருமிநாசினி தெளிப்பது, பாதிக்கப்பட்டவர் வசிக்கும் பகுதியை தனிமைப்படுத்தல் என முன்னெச்சரிக்கை மேற்கொண்டதால் பரவல் தடுக்கப்பட்டது. துாத்துக்குடியில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் லேப் டெக்னிஷியன் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. இதே போல காயல்பட்டனம் அரசு மருத்துவமனை டாக்டருக்கு தொற்று பரவியதால் மருத்துவமனையும் தற்காலிகமாக மூடப்பட்டது. சமூக இடைவெளியுடன் மார்க்கெட்கள் செயல்படுதல், வெளியூர்களில் இருந்து நோயாளிகள் வருவதை கண்காணிக்க செக்போஸ்ட்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் கடந்த மே.,3ம் தேதி ஒருவருக்கு கூட நோய்தொற்று இல்லாத மாவட்டம் என்ற பெயர் பெற்றது. தற்போது சவலாக இருப்பது மகராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து வருபவர்களில் நோய் தொற்றை அறிவதுதான்.எனவே துாத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, வேம்பார், எட்டயபுரம், விளாத்திகுளம், சாத்தான்குளம் என 9 இடங்களில் தனியார் கல்லுாரி வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சோதனை முடிவு தெரியும் வரையிலும் அவர்கள் அந்த மையங்களில் தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது.சோதனை முடிவில் யாருக்காவது நோய் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டால் அவர்கள் துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறார்கள். மற்றவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இதன் மூலம் நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது.

துாத்துக்குடியில் ஊரடங்கு காலத்தில் ரோட்டில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள், தன்னார்வலர் தொண்டுநிறுவனங்களால் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரால் கண்டறியப்பட்டார். தற்போது அவர்களுக்கு உணவு,உடை வழங்கப்பட்டு புதிய வாழ்வை மீட்டெடுத்துள்ளனர்.


latest tamil news


நோய் தடுப்பு நடவடிக்கையில் கை படாமல், கால்களால் இயக்கி சானிடைசரால் கையை சுத்தம் செய்யும் கருவிகள் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.தற்போது புதிதாக தெர்மல் இமேஜிங் ஸ்கேனர் எனப்படும் புதிய கருவி கலெக்டர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சோதனை மேற்கொள்ளாமல் அதன் முன்பு நின்றாலே ஒருவரின் உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

சந்தீப் நந்துாரி மேற்கொண்ட இன்னொரு சிறப்பான பணி, அரசு மருத்துவமனையில் இருந்து குணமடைந்த நோயாளிகளை அவர்கள் வீட்டுக்கு செல்லும்போது,அவரே நேரில் சென்று பழங்கள், பிஸ்கட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி புன்முறுவலோடு வழியனுப்பிவைத்ததுதான். துாத்துக்குடி மருத்துவமனையில் இருந்து ஒரு நாளில் ஒரு நோயாளியோ, பத்து பேரோ எத்தனை பேர் டிஸ்சார்ஜ் என்றாலும் கலெக்டர் நேரில் சென்று வாழ்த்தி வழியனுப்பியுள்ளார்.


latest tamil news
இதே போல துாத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் பீகார், ஜார்கன்ட், உ.பி.,உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்துஅவரே நேரில் ரயிலில் வழியனுப்பி வைத்துள்ளார். கொரோனா பாதித்தவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த ஒரு வாலிபர், துாத்துக்குடியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் இறந்தனர். அவர்களின் இறுதிசடங்குகளும் முறைப்படி மேற்கொள்ளப்பட்டது. பத்திரிகையாளர்களை தினமும் சந்தித்து மாவட்டத்தின் புள்ளிவிபரங்களை தெரிவித்துவந்துள்ளார். போனில் எப்போது அழைத்தாலும் அவரே பதிலளிக்கிறார்.

இதுகுறித்து சந்தீப் நந்துாரி கூறுகையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ள நடைமுறைகளை முறையாக பின்பற்றிவருகிறோம். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தியுள்ளோம். மருத்துவ சோதனைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்புகிறோம். இதன் மூலம் மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது. துாத்துக்குடி மாவட்டத்தில் தற்போது உள்ளூர் நோயாளிகள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. பாதிக்கப்பட்டவர்களும் மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களும் விரைவில் குணமடைவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார் கலெக்டர் சந்தீப்நந்துாரி.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-மே-202016:25:03 IST Report Abuse
Bhaskaran அந்த மாவட்ட மக்கள் அரசு சொல்படி கேட்பவர்கள் .சுய கட்டுப்பாடும் உள்ளவர்கள்
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
20-மே-202021:11:04 IST Report Abuse
Perumal It is his duty and he is paid for that.
Rate this:
Cancel
20-மே-202017:39:18 IST Report Abuse
Rajesh-Singapore Nice Work Sir..Systematically you have approached the issue..Hats off sir..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X