பொது செய்தி

இந்தியா

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கம்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
உள்நாடு, விமானசேவை, ஹர்திப்சிங்புரி, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Civil aviation minister, Hardeep Singh Puri, domestic flights

புதுடில்லி: வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைக்கு, கடந்த மார்ச், 25 முதல் தடை விதிக்கப்பட்டது. முதல்கட்ட ஊடரங்கின் போது, விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, கட்டணத்தை திருப்பி அளிக்கவும் விமான சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.


latest tamil news
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி கூறுகையில், மே 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவக்கப்படும். இதற்காக அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குறைந்தளவு விமான சேவைகள் அனுமதிக்கப்படும். பின்னர் படிப்படியாக விமான சேவை முழு அளவில் விரிவுபடுத்தப்படும். விமான நிறுவனங்கள், ஊழியர்கள், பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghavan.G - coimbatore,இந்தியா
20-மே-202019:49:33 IST Report Abuse
Raghavan.G Even international services are to be resumed to save the people immediately. All are human beings. Pain is same for all whether poor or rich.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-மே-202018:23:03 IST Report Abuse
S. Narayanan All transport services should be resumed immediately with all precautions to redeem our economy.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X